திருநிறை உலகுயிர் பணிசெய்யும் இறையே
திருவடி நம நம நமவே
செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
தேசிக வடிவே நமவே
தீனதயா பரனே கருணாகர
திருவடி நம நம நமவே
தெரிசன மருள்புரிவாயே
திருக்கர மலரே தருவாயே
தேவ தேவ துணை நீயே
செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
தேசிக வடிவே நமவே
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
அன்பும் அறம் பொருள் இன்பமும் சூழ்க
அறிவொடு ஒற்றுமை வாழ்க
பண்பு நிறைந்திடும் இன்ப நலந்திகழ்
பல கலை ஞானமும் வாழ்க
பாருலகெங்கிலும் அன்பு மணங்கமழ்
பாக்கிய முத்தமிழ் வாழ்க
பாவலர் நாவலர் வாழ்க
இசைப் பண்ணொடு யாழொலி வாழ்க
பண்பு நிறைந்கிடும் இன்ப நலந்திகழ்
பலகலை ஞானமும் வாழ்க
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
அன்னை பிதாகுரு பொன்னடி வாழ்க
அருமறைப் பொருளடி வாழ்க
மன்னுயிர் ஓம்பிடும் வீரமும் தியாகமும்
மாநிலம் எங்கினும் வாழ்க
மாண்புறு தம்பிலுவில் உயர்தரகலை
மாமணிச் சாலையூம் வாழ்க
வாழிய செந்தமிழ் வாழ்க
உயர் மாணவர் தீங்குரல் வாழ்க
வாழிய வாழிய வாழ்க
மாண்புறு தம்பிலுவில் உயர்தர கலை
மாணிச் சாலையூம் வாழ்க
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
- சங்கீத பூசணம்: சீ. கணபதிப்பிள்ளை