கிழக்கிலங்கையின் தென்பகுதியில் திருக்கோவில் என்னும் பிரதேசம் அமைந்துள்ளது. தமிழர்கள் தனிப்பெரும்பான்மை இனமாக வாழ்ந்துவரும் இப்பிரதேசம் 1977ம் ஆண்டு வரையும் அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் செயலகப்பிரிவுடன் இணைந்திருந்தது. இன்று இப்பிரதேசம் தனியானதோரு செயலகப்பிரிவாக இயங்கிவறருவதன் காரணமாக, இங்கு வாழ்ந்துவரும் மக்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றிப் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இப்பிரதேசத்தில் பழமைவாய்ந்த கிராமங்களாகத் தம்பிலுவில், திருக்கோவில் ஆகிய கிராமங்கள் விளங்குகின்றன. இக்கிராமங்களின் பெரிய கல்விக்கூடமாக தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் பொன்விழாக் காண்கிறது.
Share