இப்பாடசாலை இலச்சினையில் அமைந்துள்ள இந்து ஆலய முகப்புத் தோற்றம் ஆனது தொன்மை மிகுகாலம் முதல இப்பிதேச வாழ் மக்கள் சைவ சமய மரபுகளைத் தழுவி வாழ்ந்து வருவதை புலப்படுத்துகின்றது. அதன் அருகே அமைந்துள்ள சூரிய உதயமும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலக் காட்சியானது கதிரவனே உலகிற்கு ஓளியூட்டி மக்கள் வாழ்வை வளமாக்கி மலரச் செய்கின்றது என்ற உயரிய தத்துவத்தையும் எழில் கொஞ்சும் இப்பிரதேச மக்களின் கடல் வளச்சிறப்பையூம் இயக்கை அழகையும் சித்தரிக்கின்றது.
அதன் அருகே அமைந்துள்ள புத்தகமும் அகல் விளக்கும் மாணவர்களது ஒளிவிளக்கு கல்வியே எனும் இலட்சிய நோக்கைச் சித்தரிக்கின்றது. அத்தோடு இலச்சினையின்
வெளிப்புறத்தின் இரு மருங்கிலும் அமைந்துள்ள நெற்கதிர்கள் காராளர் நிறைந்து வாழும் இப்பிரதேச மக்களின் உழவுத் தொழிலினையும் செல்வச் வெழிப்பினையும் தான தர்ம சிறப்புக்களையும் சொல்லாமற் சொல்லுகின்ற தல்லவா? மேலும் இலச்சினையில் எழுதப்பட்டுள்ள “கற்பவனாயிரு நல்லவனாயிரு” எனும் மகுட வாசகம் மாணவர்களது கல்வியின் இறுதி இலக்கை துல்லியமாக்க காட்டி நிற்கின்றது என்றால் மிகையில்லை.