Showing posts with label about. Show all posts
Showing posts with label about. Show all posts
Thursday, April 1, 2010

Vision

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மாணவ சமுதாயத்தினரை வழிகாட்டி, தமிழ்க் கலாச்சார பண்பாடுகளையும், விழுமியங்களையும் பேணி எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய சமநிலை ஆளுமையுடைய நற்பிரஜைகளை உருவாக்குதல்.
Read more...

Logo (பாடசாலை இலச்சினை)


இப்பாடசாலை இலச்சினையில் அமைந்துள்ள இந்து ஆலய முகப்புத் தோற்றம் ஆனது தொன்மை மிகுகாலம் முதல இப்பிதேச வாழ் மக்கள் சைவ சமய மரபுகளைத் தழுவி வாழ்ந்து வருவதை புலப்படுத்துகின்றது. அதன் அருகே அமைந்துள்ள சூரிய உதயமும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலக் காட்சியானது கதிரவனே உலகிற்கு ஓளியூட்டி மக்கள் வாழ்வை வளமாக்கி மலரச் செய்கின்றது என்ற உயரிய தத்துவத்தையும் எழில் கொஞ்சும் இப்பிரதேச மக்களின் கடல் வளச்சிறப்பையூம் இயக்கை அழகையும் சித்தரிக்கின்றது.

அதன் அருகே அமைந்துள்ள புத்தகமும் அகல் விளக்கும் மாணவர்களது ஒளிவிளக்கு கல்வியே எனும் இலட்சிய நோக்கைச் சித்தரிக்கின்றது. அத்தோடு இலச்சினையின்
வெளிப்புறத்தின் இரு மருங்கிலும் அமைந்துள்ள நெற்கதிர்கள் காராளர் நிறைந்து வாழும் இப்பிரதேச மக்களின் உழவுத் தொழிலினையும் செல்வச் வெழிப்பினையும் தான தர்ம சிறப்புக்களையும் சொல்லாமற் சொல்லுகின்ற தல்லவா? மேலும் இலச்சினையில் எழுதப்பட்டுள்ள “கற்பவனாயிரு நல்லவனாயிரு” எனும் மகுட வாசகம் மாணவர்களது கல்வியின் இறுதி இலக்கை துல்லியமாக்க காட்டி நிற்கின்றது என்றால் மிகையில்லை.
Read more...

Flag (பாடசாலைக் கொடி)


தம்பிலுவில் மத்திய மாக வித்தியாலயத்தின் பாடசாலைக் கொடியானது கருஞ்சிவப்பு மஞ்சள் வர்ணங்களைக் கொண்டது. இதில் பாடசாலையின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இவ்விரு வர்ணங்களும் இணைந்ததாக இக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக தமிழர் தம் மங்கல வர்ணங்களாக இவ் வர்ணங்கள் அமைந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பம்சமாகும்.

இடதுபக்கத்தில் மஞ்சளும் வலது பக்கத்தில் கருஞ்சிவப்பும் சம அளவுகளில் கொண்டுள்ள இக்கொடியின் மத்தியில் பாடசாலை இலச்சினை மகுடவாசகத்தைத் தாங்கியவாறு
காணப்படுகிறது.

Read more...

Anthem

திருநிறை உலகுயிர் பணிசெய்யும் இறையே
திருவடி நம நம நமவே
செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
தேசிக வடிவே நமவே
தீனதயா பரனே கருணாகர
திருவடி நம நம நமவே
தெரிசன மருள்புரிவாயே
திருக்கர மலரே தருவாயே
தேவ தேவ துணை நீயே
செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
தேசிக வடிவே நமவே
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)

அன்பும் அறம் பொருள் இன்பமும் சூழ்க
அறிவொடு ஒற்றுமை வாழ்க
பண்பு நிறைந்திடும் இன்ப நலந்திகழ்
பல கலை ஞானமும் வாழ்க
பாருலகெங்கிலும் அன்பு மணங்கமழ்
பாக்கிய முத்தமிழ் வாழ்க
பாவலர் நாவலர் வாழ்க
இசைப் பண்ணொடு யாழொலி வாழ்க
பண்பு நிறைந்கிடும் இன்ப நலந்திகழ்
பலகலை ஞானமும் வாழ்க
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)

அன்னை பிதாகுரு பொன்னடி வாழ்க
அருமறைப் பொருளடி வாழ்க
மன்னுயிர் ஓம்பிடும் வீரமும் தியாகமும்
மாநிலம் எங்கினும் வாழ்க
மாண்புறு தம்பிலுவில் உயர்தரகலை
மாமணிச் சாலையூம் வாழ்க
வாழிய செந்தமிழ் வாழ்க
உயர் மாணவர் தீங்குரல் வாழ்க
வாழிய வாழிய வாழ்க
மாண்புறு தம்பிலுவில் உயர்தர கலை
மாணிச் சாலையூம் வாழ்க
(நமவே நமவே நமவே நம நம நம நமவே)


- சங்கீத பூசணம்: சீ. கணபதிப்பிள்ளை
Read more...
 
Thambiluvil Madhya Maha Vidyalayam - National School © 2011 Thirukkovi.com & Thambiluvil.info. Designed by Thambiluvil.info

Contact us - mail@thambiluvil.info